“இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும், கவனமா இருங்க…”- ‘வெதர்மேன்’ அட்வைஸ்

"இந்த மாத 20 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை மற்றும் தமிழகத்தில் அனல் காற்றின் தாக்கம் குறையும்”

 Share
EMAIL
PRINT
COMMENTS
“இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும், கவனமா இருங்க…”- ‘வெதர்மேன்’ அட்வைஸ்

"சென்னையில் இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கும்"


தென்மேற்கு பருவமழையினால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் பகுதிகளில் மழை பெய்து வந்தாலும், மாநிலத்தின் பெரும்பான்மை இடங்களில் வெயில் இன்னும் சுட்டெறித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழையின் தாக்கமே இல்லை. இந்நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான். 

இது குறித்து அவர், “வாயுப் புயலைத் தொடர்ந்து மேக மூட்டம் குறைந்துள்ளது. 

சென்னையில் இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கும். புதுச்சேரி, கடலூர், நாகை மற்றும் வட தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயில் இருக்கும். வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களிலும் வெயில் அதிகமாக இருக்கும்.

இந்த மாத 20 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை மற்றும் தமிழகத்தில் அனல் காற்றின் தாக்கம் குறையும்” என்று தகவல் தெரிவித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................