This Article is From Jun 16, 2020

Chennai Rains: சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு எனத் தகவல்!

வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

Chennai Rains: சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு எனத் தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா, கூடலூர் பஜார், சின்னக்கல்லார், வால்பாறை, சோலையார், சின்கோனா, பளிப்பட்டிப் பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது
  • தமிழக மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
  • தமிழக உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுவையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையத்தின் தகவல்படி, “தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸும் ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா, கூடலூர் பஜார், சின்னக்கல்லார், வால்பாறை, சோலையார், சின்கோனா, பளிப்பட்டிப் பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது” எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.