This Article is From Nov 15, 2018

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்ட போலீசுக்கு குவியும் பாராட்டு!

21 நொடிகள் ஓடும் அந்த சிசிடிவி வீடியோ காட்சியில் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்ட போலீசுக்கு குவியும் பாராட்டு!

பயணி ஒருவரின் கால்கள் நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளிக்கு இடையே சிக்கியது.

Chennai:

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலை பிடிப்பதற்காக பயணி ஒருவர் வேகமாக ஒடி சென்று ஒரு பெட்டியில் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பயணியின் கால்கள் நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளிக்கு இடையே சிக்கியது.

அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் அதிகாரி துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை நோக்கி ஓடி அவரை பாதுகாப்பாக வெளியே இழுத்தார். இதனால், அதிர்ஷ்டவசமாக அந்த பயணி எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினார்.
 

21 நொடிகள் ஓடும் அந்த சிசிடிவி வீடியோ காட்சியில் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் துரிதமாக செயல்பட்ட அந்த அதிகாரிக்கு பலரும் பாரட்டு தெரிவித்து வருகின்றனர். 'பாதுகாப்பு படைக்கு இது போன்ற பெறுப்பான அதிகாரிகளே தேவை என்றும் உங்களின் முயற்சியால் விலை மதிப்பில்லாத ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் பலரும் சமூகவலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்தில், மும்பையில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய 7வயது சிறுவனை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு மீட்டார். இதைத்தொடர்ந்து அந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு அவரது மனிதநேயத்தை பாராட்டி ரயில்வே நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

.