சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு!

கோவையின் வால்பாறையிலும், கன்னியாகுமரியின் கீழ் கோதையாரிலும் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்குத் தென் மேற்குப் பருவக் காற்று காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூரில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கோவையின் வால்பாறையிலும், கன்னியாகுமரியின் கீழ் கோதையாரிலும் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.