சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம், மேக மூட்டத்துடன் காணப்படும்.

தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால், தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு, தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தென் மேற்குப் பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.