This Article is From Sep 20, 2018

இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹெல்மெட் (Helmet) அணிய வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும்.

இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் (Helmet) அணிய வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் (High Court) உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இரு சக்கர (Two Wheeler) வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித் த நீதிபதிகள், தமிழகத்தில் மோட்டார் வாகன விதிகளிலேயே ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது உள்ளது. ஹெல்மெட் விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்துவதில்லை, அதனை அமல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தினர்.

மேலும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக காவல்துறை டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்ட ர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உரிய விளக்கம் அளித்ததுடன், விரிவான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் குறித்து கூறப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பிக்கட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனர். மேலும் ஹெல்மெட் அணிவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

.