சென்னையில் 6 மாதங்களுக்கு பின்னர் மழை பெய்தது! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழை நீடிக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்னையில் 6 மாதங்களுக்கு பின்னர் மழை பெய்தது! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

இன்னும் 2 நாட்களில் வெப்பம் படிப்படியாக குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் 6 மாதங்களுக்கு பின்னர் மழை பெய்துள்ளது. வெப்பம் தணிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தங்கும் விடுதிகள் சில தண்ணீர் பிரச்னையால் மூடப்பட்டுள்ளன. 

தண்ணீர் தட்டுப்பாட்டால் சில உணவகங்களில் குறைந்த அளவு உணவே சமைக்கப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களில் வெப்பம் தமிழகத்தில் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் சென்னை கிண்டி, ஆலந்தூர், மேடவாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுத் தாங்கல், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. 6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் மழை பெய்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................