பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம் பெற்ற சென்னை மென்பொருள் பொறியாளர் கைது

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பிரதீப் தன்னிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டு கொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பெண்களை ஏமாற்றி நிர்வாண புகைப்படம் பெற்ற சென்னை மென்பொருள் பொறியாளர் கைது

60வது பெண்களுக்கு மேல் புகைப்படம் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. (Representational)

Hyderabad: 

நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக வேலை வாங்கித் தருவதாக பேசி சென்னையைச் சேர்ந்த  மென்பொருள் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

 சென்னையில் புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தின் ஊழியர் பிரதீப் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த பெண்ணின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அவரது மொபைல் போனில் பல பெண்களின் 60க்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பிரதீப் தன்னிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டு கொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

“முதலில் சாதாரண புகைப்படங்களை அனுப்புமாறு பெண்ணைக் கேட்டுள்ளார். பின் ஹோட்டல் நிர்வாகம் உடல் அமைப்பை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புவதாக கூறி நிர்வாண புகைப்படங்களை கோரியுள்ளார். அவரை நம்பி புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் பேசவதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.

விசாரணையிலும் இவையாவும் உண்மையென நிறுவப்பட்டுள்ளது.

பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................