This Article is From Aug 20, 2018

கேரள வெள்ளத்தில் சிக்கித்தவித்த விலங்குகள்… உதவிக்கரம் நீட்டிய சென்னைவாசிகள்!

கேரளா வெள்ளத்தில் மீட்புக் குழு மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்க ஒரு புரம் பல தன்னார்வலர்கள் விலங்குகளை மீட்டுக் கொண்டிருக்கின்றனர்

கேரள வெள்ளத்தில் சிக்கித்தவித்த விலங்குகள்… உதவிக்கரம் நீட்டிய சென்னைவாசிகள்!

கேரளா வெள்ளத்தில் மீட்புக் குழு மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்க ஒரு புரம் பல தன்னார்வலர்கள் விலங்குகளை மீட்டுக் கொண்டிருக்கின்றனர்.இதில் சிலர் சென்னையிலிருந்து சென்று விலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் ‘பீ மட்’(Be mad) என்ற விலங்குகளுக்கான இருப்பிடத்தையும் கிலவுட் 9 (cloud 9) என்ற கால்நடை மருத்துவமனையை நடத்திவருபவர்களில் மீட்பு பணிக்கு பயிற்சி பெற்ற 4 பேர் மூன்று நாட்களுக்கு முன்னர் கேரளாவிற்கு விலங்குகளை மீட்கச் சென்றுள்ளனர்.

கேரளாவில் அதிகம் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதிக்கு முதலில் சென்று பார்வையிட்ட அவர்கள் அங்கு அனைத்து விலங்குகளும் இறந்து கிடப்பதை பார்த்துவிட்டு கோட்டையம்,எர்ணாக்குளம் போன்ற இடங்களுக்கு சென்று உயிருடனிருக்கும் விலங்குகளை மீட்களாம் என்று முடிவு செய்தனர்.

djo9j64g

தற்போது கோட்டையத்திலிருக்கும் இந்த மீட்புக்குழு இதுவரை 60 திற்கும் மேற்பட்ட விலங்குகளை மீட்டுள்ளனர்.விலங்குகளை மீட்பதற்காக பலர் அவர்களைத் தொடர்புக் கொண்டுவருகின்றனர். மீட்கும் விலங்குகளை உரிமையாளர்களின் நண்பர் வீட்டில் அல்லது தண்ணீர் இல்லாத இடத்தில் கூடாரம் போட்டு அதற்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர்.

நேற்று, இந்த மீட்புக்குழுவினர் 18 நாய்களை மீட்டுள்ளனர். கோட்டையத்தில் ஒரு பெண்மனி 18 நாய்களை வளர்த்து வந்தார் அவரது வீட்டில் 10 அடி அளவுத் தண்ணீர் நிறைந்திருக்க, கூண்டில் நாய்கள் அடைக்கப்பட்டிருந்தது. இந்த மீட்புக் குழுவினர் அந்த இடத்திற்கு படகு மூலம் சென்று கழுத்தளவு தண்ணீரிருந்த வீட்டிலிருந்து 18 நாய்களை மீட்டுள்ளனர். ’18 நாய்களையும் ஓரே நேரத்தில் மீட்டு படகில் கொண்டுவந்தது மிகவும் சவாலாக இருந்தது என்று கூறுகிறார் மீட்புக் குழுவில் ஒருவரான நிஷாந்த்.

ah2tmm98

இன்னும் பல இடங்களுக்கு சென்று விலங்குகளை மீட்க வேண்டுமென்று கூறிய அவர், மழை குறைந்துள்ள இந்த நேரத்தில் தான் உதவிக்கு அதிக தன்னார்வலர்கள் தேவை. எங்கள் குழுவிலிருந்து மேலும் சிலர் மீட்பு பொருட்களை எடுத்துக் கொண்டு வரவுள்ளனர். தற்போது நாங்கள் மேலும் இங்கு மூன்றிலிருந்து நான்கு நாட்களிருந்து விலங்குகளை மீட்கும் பணியில் ஈடுப்பட உள்ளோம் என்று கூறுகிறார் கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக விலங்குகளை மீட்டு வரும் நிஷாந்த். கேரளா வெள்ளத்தில் சிக்கியிருக்கும் விலங்களை மீட்பதற்கு நிஷாந்தை தொடர்புக் கொள்ளலாம்(7845018969). அல்லது கேரளா விலங்குகள் மீட்புகுழுவின் ஹெல்ப் லைன் எண்ணை தொடர்புக் கொள்ளலாம்(+919167466569)

io37h1j

வெள்ளத்தின் போது உங்கள் செல்லபிராணிகள் மீது எடுத்துக் கொள்ளவேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகள்.

உங்கள் செல்லபிராணியை கைவிட்டுச் செல்லாதீர்கள். செல்லபிராணிகளை கட்டியோ அல்லது கூண்டிலோ அல்லது மூடிய அறையில் போட்டு செல்வதால் அவைகளின் இயற்கையான உயிர் பிழைப்பதென்பது வீணாகிவிடும். செல்லபிராணிகளின் கழுத்தில் பெயர் மற்றும் உரிமையாளரின் தொலைப்பேசி எண்களின் விவரத்தை எழுதி வைப்பதால் மீட்புக்குழுவினருக்கு உங்களை தொடர்புக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.இது போன்ற சில பாதுகாப்புகளைச் செய்வதால் செல்லபிராணிகளை வெள்ளத்தின் போது காப்பாற்றுவதற்கு மீட்புக்குழுவினருக்கு உதவியாக இருக்கும்.

- மோனிகா பரசுராமன்

.