மாமல்லபுரம் வந்த சீன அதிபரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற திபெத்தியர்கள் கைது!!

2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜிங்பிங், மாமல்லபுரத்தில் சிற்பங்களை இன்று கண்டு ரசித்தார். நாளையும் மாமல்லபுரத்தில் இருக்கும் அவர் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

மாமல்லபுரம் வந்த சீன அதிபரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற திபெத்தியர்கள் கைது!!

சீனா - திபெத் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.

Chennai:

சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜிங்பிங்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற திபெத்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலையம் மற்றும் ஜிங்பிங் தங்கியுள்ள கிண்டி சோழா ஓட்டல் அருகே இந்த கைது சம்பவங்கள் நடந்துள்ளன. 

சீன அதிபர் ஜிங்பிங் 2 நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் பாரம்பரிய கலைகளுடன், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அவரை நேரில் வரவேற்றனர். 

மாமல்லபுரத்தில் வேட்டி சட்டையுடன் சீன அதிபரை வரவேற்ற மோடி, அவருக்கு அங்குள்ள சிற்பங்கள், கோயில்களை சுற்றக் காண்பித்தார். 

சீனா - திபெத் இடையே நீண்ட கால பிரச்னை இருந்து வரும் நிலையில், சென்னை வந்துள்ள சீன அதிபரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட திபெத்தியர்கள் திட்டமிடுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர்கள், சென்னை விமான நிலையம் மற்றும் சீன அதிபர் தங்கியுள்ள ஓட்டல் அருகே 11 திபெத்தியர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் போலீசாரால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இதுவரை வழக்கு ஏதும் போடப்படவில்லை என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்தது. சீன அதிபர் சென்னையை விட்டு கிளம்பியது அவர்கள் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.