மிரட்டும் ’செக்க சிவந்த வானம்’ - ரஜினிகாந்த் படங்களுக்கு இணையான ஓப்பனிங்!

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான ’செக்க சிவந்த வானம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை வெளியாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இணையான ஓப்பனிங்கை பெற்றது.

மிரட்டும் ’செக்க சிவந்த வானம்’ - ரஜினிகாந்த் படங்களுக்கு இணையான ஓப்பனிங்!

’செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ்.

New Delhi:

ஜாம்பவான் இயக்குநர் மணிரத்னம், தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி உள்ளிட்டோரை வைத்து ‘செக்க சிவந்த வானம்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் பிரகாஷ் ராஜ், தியாகராஜன் நடிகைகள் அதிதி ராவ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெயசுதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
 

 

நீண்ட நாட்களுக்கு பின்னர் ‘கேங்ஸ்டர்’ ஸ்டைல் கதையை மணிரத்னம் இயக்கியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் மும்பை டானாக கமல்ஹாசன் நடிப்பில் வெற்றி நடைப்போட்ட ‘நாயகன்’ போன்ற ஒரு களத்தை மீண்டும் அவர் தேர்வு செய்துள்ளார். சிவா ஆனந்துடன் இணைந்து ’செக்க சிவந்த வானம்’ திரைக்கதையை மணிரத்னம் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் டையானா எரப்பாவை புதிதாக அறிமுகம் செய்துள்ளார் மணிரத்னம். தேசிய விருது பெற்ற இயக்குநருடன் பணிபுரிந்த அனுபத்தை டையானா ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், அறிமுக நடிகையான நான் மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குநரின் படத்தில் நடிப்பதன் மூலம் பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. அவர் படபடிப்பு தளத்தை கையாளும் விதம், படபடிப்பில் ஒவ்வொருவரையும் அணுகும் முறை எல்லாவற்றிலும் ஒரு தனித்துவம் இருப்பதாக அவர் கூறினார். மேலும், மணிரத்னத்தின் ’காற்று வெளியிடை’ நாயகியான அதிதி ராவ், மணிரத்னம் படத்தின் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்பது தன்னுடைய நீண்ட நாள் கனவு என ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்களின் திரைப்படம் மட்டுமே அதிகாலை திரையிடப்பட்டு வந்தது. ஆனால், இன்று ’செக்க சிவந்த வானம்’ திரைப்படம் சென்னையில் இன்று அதிகாலை திரையிடப்பட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இணையான ஓப்பனிங்கை பெற்றுள்ளது. கபாலிக்கு பிறகு, ரஜினிகாந்தின் அடுத்த படத்தை ஆவளுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ’காலா’-வின் ரிலீஸ் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. முதல்நாள் காட்சிகள் முழுவதும் ஹவுஸ்புல் காட்சிகளானது இருந்தாலும், ரஜினிகாந்தின் பிற படங்களுக்கு கிடைத்த வரவேற்பை ஒப்பிடும் போது, ’காலா‘ மிக குறைந்த வரவேற்பையே பெற்றது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ’2.0’ படத்தை தயாரித்து வெளியிடும் லைகா நிறுவனம் தான் மணிரத்னத்துடன் இணைந்து ’செக்க சிவந்த வானத்தை’ தயாரித்து வெளியிட்டுள்ளது.