This Article is From Sep 06, 2019

Chandrayaan 2: நிலவில் தரையிறங்க சந்திராயன் 2 'தயார்'; பிரதமர் மோடி நேரலையில் பார்க்க உள்ளார்!

Chandrayaan 2 Landing: கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது.

Chandrayaan 2: நிலவில் தரையிறங்க சந்திராயன் 2 'தயார்'; பிரதமர் மோடி நேரலையில் பார்க்க உள்ளார்!

இதுவரை நிலவில் தரையிறங்கிய அனைத்து விண்கலங்களும் அதன் வட துருவத்தில்தான் லேண்ட் ஆகின. சந்திராயன் 2 மூலம் முதன்முறையாக தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ளது இந்தியா. 

ஹைலைட்ஸ்

  • நாளை அதிகாலை நிலவில் தடம் பதிக்கிறது சந்திராயன் 2
  • நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 2 தரையிறங்கும்
  • நாளை காலை ரோவர் பிரக்யான், நிலவில் கால் பதிக்கும்
New Delhi:

chandrayaan 2 rover: சந்திராயன் 2 விண்கலம், சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் சந்திராயன் 2 ஆகத்தான் இருக்கும். 

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. 

விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். நிலவின் வளங்கள், நிலவில் இருக்கும் நீர் உள்ளிட்டவை குறித்து ரோவர் ஆராயும். மிகவும் அதிக ரெசல்யூஷன் கொண்ட படங்களையும் அது எடுக்கும். 

சந்திராயன் 2 குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன், “நாங்கள் மேற்கொண்டதிலேயே இதுதான் மிகவும் கடினமான திட்டம்” என்று கூறியுள்ளார். 

இஸ்ரோவின் கன்ட்ரோல் ரூமிலிருந்து சந்திராயன் 2, நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பள்ளிக் குழந்தைகள் நேரலையில் பார்க்க உள்ளனர். 
 

இதுவரை நிலவில் தரையிறங்கிய அனைத்து விண்கலங்களும் அதன் வட துருவத்தில்தான் லேண்ட் ஆகின. சந்திராயன் 2 மூலம் முதன்முறையாக தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ளது இந்தியா. 

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கிய பெருமையை சந்திராயன் 2 மூலம் இந்தியாவும் பெரும். 

கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னரே, சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், லான்ச்சிற்கு 56 நிமிடங்களுக்கு முன்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் மீண்டும் அது ஜூலை 23 அன்று திட்டமிடப்பட்டது. 

சந்திராயன் 2 திட்டத்திற்கு இஸ்ரோ ஒதுக்கியது சுமார் 1,000 கோடி ரூபாய்தான். இது அமெரிக்காவின் நாசா ஒதுக்கும் பட்ஜெட்டை விட 20 மடங்கு குறைவாகும். சமீபத்தில் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்' படத்தின் பட்ஜெட்டைவிட இது குறைவானதாகும். 

.