This Article is From Aug 22, 2019

சந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு!

சந்திராயன்-2 வெளியிட்டுள்ள நிலவின் முதல் புகைப்படத்தில் மரே ஓரியண்டல் பேசின் மற்றும் அப்போலோ எரிமலைகள் தென்பட்டுள்ளன.

சந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு!

சந்திரயான் 2: அப்பல்லோ எரிமலைகள் மற்றும் மேரே ஓரியண்டேல் பேசின் உள்ளிட்ட இரண்டு அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

New Delhi:

சந்திராயன்-2, எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய சுமார் 1000 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. சுமார் 2,650 கி.மீட்டர் தொலைவில் உள்ள சந்திராயன்-2 ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்டது. 

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது. தொடர்ந்து, ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.  
 


அதாவது, நிலாவில் இருந்து குறைந்தபட்சமாக 114 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக 18,072 கிலோ மீட்டர் தூரத்திலும் சந்திரயான்-2 சுற்றி வரத்தொடங்கியது. இந்நிலையில் 21-ஆம் தேதி சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைக்கப்பட்டது.

நிலாவில் இருந்து குறைந்த பட்சமாக 114 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக 18,072 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வரும் வகையில் சுற்றுவட்டப்பாதையின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று வருகிற 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சந்திரயான் -2-ன் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்படும். ஒன்றாம் தேதிக்கு பின்னர் நிலாவில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சந்திரயான்-2 சுற்றத் தொடங்கும். இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  

சந்திராயன்-2 வெளியிட்டுள்ள நிலவின் முதல் புகைப்படத்தில் மரே ஓரியண்டல் பேசின் மற்றும் அப்போலோ எரிமலைகள் தென்பட்டுள்ளன. 

 

.