This Article is From Sep 11, 2019

சந்திரபாபு நாயுடு மற்றும் அவரின் மகன் இருவரும் வீட்டுசிறையில் அடைப்பு

வாரம் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு 100 நாட்கள் ஆட்சி நிறைவடைந்த நிலையில் கட்சியிலிருந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

சந்திரபாபு நாயுடு மற்றும் அவரின் மகன் இருவரும்  வீட்டுசிறையில் அடைப்பு

தெலுங்கு தேசம் கட்சியின் பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

New Delhi:

ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி நடத்தும் அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்க ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் அவரது தெலுங்கு தேசம் கட்சியின் பல தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வன்முறை மற்றும் மிரட்டலுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி ஒரு போராட்டத்தை திட்டமிட்டிருந்தது. அக்கட்சியின் 8 தொண்டர்கள் கொல்லப்பட்டகவும் கடந்த வாரம் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு 100 நாட்கள் ஆட்சி நிறைவடைந்த நிலையில் கட்சியிலிருந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

“இது ஜனநாயகத்திற்கு ஒரு இருண்ட நாள்” சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். காவல்துறையின் நடவடிக்கை கொடூரமானது என்று வரலாற்றில் இது போல் நடந்தது இல்லை என்று கூறினார். “இந்த அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. நான் அரசாங்கத்தையும் காவல்துறையையும் எச்சரிக்கிறேன். எங்களை கைது செய்வதன் மூலம் எங்களை கட்டுப்படுத்த முடியாது “ என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சலோ ஆத்மகூர் என்ற பெயரில் ஆத்மகூருக்கு ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவருடைய மகன் முன்னாள் அமைச்சர் நரலோகேஷ் ஆகியோர் இருந்து வெளியேற தடை விதித்த போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். 

தகவலறிந்த சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்கு வந்த தொண்டர்களையும் ஆந்திர போலீஸ் கைது செய்தது. நரசராவ்பேட்டா, சட்டானப்பள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் டெலி கான்பரன்ஸ் மூலம் மாநிலம் முழுவதும் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, ஆளும் கட்சியின் போக்கை கண்டித்து கண்டித்து இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை தான் வீட்டிற்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு, போலீஸ் காவலை மீறி பேரணிக்கு புறப்பட தயாரானார். ஆனால் அவரது வீட்டு கேட்டை மூடிய போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


 

.