இந்தாண்டு சந்திர கிரகணத்தின் தேதி, நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

இந்த முழு சந்திர கிரகணம் டெல்லி, புனே, பெங்களூரு  உள்ளிட்ட பல இடங்களில் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தாண்டு சந்திர கிரகணத்தின் தேதி, நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

இந்தாண்டு சந்திர கிரகணத்தின் தேதி, நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

 

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணத்தை உலகம் காண இருக்கிறது. இது ஜூலை 27 இரவு முதல் ஜூலை 28 அதிகாலை வரை தென்படும். இந்த நேரத்தில் நீங்கள் சிவப்பான சந்திரனையும் காண முடியும். 

 

ஜூலை 27 பின்னிரவு முதல் ஜூலை 28 அதிகாலை வரை ஒரு 1 மணி நேரம் 43 நிமிடங்களுக்கு இதனைக் காண முடியும். "பிளட் மூன்" என்றும் அழைக்கப்படுகிற இந்த தினத்தில் சந்திரன் இரத்த நிற சாயலில் இருக்கும். சந்திர கிரகணம், பூமிக்கு நேர் பின்னால் சந்திரன் செல்லும் போது நடக்கிறது, நிலவு பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு விடும். ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது, நேரடி சூரிய ஒளி சந்திரன் மீது படுவதை  நிலவு தடுக்கும். பூமியின் வளிமண்டலத்தில் இருந்து செல்லும் ஒளி தான் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கிறது, அந்த ஒளி சிவப்பாக இருப்பதால் "பிளட் மூன்" என்றழைக்கப்படுகிறது. ஜூலை 27, 2018-ல் ஏற்படுகிற முழு சந்திர கிரகணம் முழு நிலவன்று வருகிறது.

சந்திர கிரகணம் 2018: சந்திர கிரகணத்தின் நாள் மற்றும் நேரம்

சந்திர கிரகணத்தின் முதல் பகுதியில் சந்திரன் பூமியின் நிழலின் கீழ் வரும். இது முதல் கட்டம் என்றழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு ஜூலை 27 இரவு 11:44 மணிக்கு தொடங்குகிறது. முதல் கட்டம் இரவு 11:54 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முழு சந்திர கிரகணம் ஜூலை 28 அதிகாலை 1:00 மணிக்கு தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த முழு சந்திர கிரகணம் டெல்லி, புனே, பெங்களூரு  உள்ளிட்ட பல இடங்களில் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

total lunar eclipse

இரண்டாவது கட்டத்தில் சந்திரன் அதனுடைய வட்ட பாதையில் சுற்றி வரும், பின்னர் ஒரு சிறிய சந்திர கிரகணம் நிகழும் இது அதிகாலை 2:43 மணிக்கு புலப்படும்.

 

தற்போது வெளிவந்துள்ள செய்தியின் படி, சந்திரன் சூரியன் மற்றும் பூமியுடன் சரியான வரிசையில் இருக்கும். இந்த கிரகணம் வட அமெரிக்காவைத் தவிர உலகம் முழுவதும் புலப்படும். இதனை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் சிறப்பாகக் காண முடியும்.  

ஜனவரி 31, அன்று இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதில் சந்திரன் சிவப்பு நிறத்தில் மிகப் பெரிய அளவில் இருந்தது. எனினும் இது சில நாடுகளில் தான் தெரிந்தது. 152 ஆண்டுகளில் தற்போது தான் சூப்பர் மூன், ப்ளூ மூன் மற்றும் பிளட் மூன் ஒரே நேரத்தில் வந்துள்ளது. 

சந்திர கிரகணம் 2018: சந்திர கிரகணம் உங்களை பாதிக்கிறதா?

சந்திரனின் சுழற்சி உங்களுடைய உடல் அமைப்பில், உடல் மற்றும் உளவியல் ரீதியாக தாக்கத்தை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. நாடு முழுவதும் சந்திர கிரகணத்துடன் தொடர்புடைய பல்வேறு நம்பிக்கைகளும் பழக்கங்களும் இருக்கின்றன. இது பல்வேறு மூட நம்பிக்கைகளை வளர்ந்துள்ளது, அவை இன்றளவும் உலவி வருகின்றன. எனினும் இந்த நம்பிக்கைகள் மற்றும் பழக்கங்களுக்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை.  

 

இனி, நீங்கள் அடுத்த சந்திர கிரகணத்தை டிசம்பர் 31, 2018 அன்று காண்பீர்கள். 

 

More News