This Article is From Sep 09, 2019

Rain: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதையொட்டி மேற்கு மத்திய வங்க கடலுக்கு மீனவர்கள் மீன்படிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Rain: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதையொட்டி மேற்கு மத்திய வங்க கடலுக்கு மீனவர்கள் மீன்படிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.  

இது குறித்து மேலும், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ. மழையும், பொள்ளாச்சி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.
 
.