This Article is From Apr 30, 2019

‘4 வாரம் அல்ல, 4 நாள்தான்!’- ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கறார் உத்தரவு

‘ஊடகங்களில் கசிந்த ஆவணங்களை ஆதரமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று வாதாடியது. மத்திய அரசின் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை

‘4 வாரம் அல்ல, 4 நாள்தான்!’- ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கறார் உத்தரவு

ரஃபேல் ஒப்பந்தம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கவுல் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குக் கீழ் இன்று ரஃபேல் விவகார வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

New Delhi:

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இரண்டாவது முறையாக தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம், 4 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் மே 6 ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கவுல் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குக் கீழ் இன்று ரஃபேல் விவகார வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

முன்னதாக எதிர்கட்சிகள் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்திம் மத்திய அரசு, ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என்று கூறி விசாரணை கோரியது. அந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம், அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து ஊடகங்களில் ரஃபேல் ஒப்பந்தத்தின் ரகசிய ஆவணங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின. இதை முன் வைத்து மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. 

இரண்டாவது முறையாக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு, ‘ஊடகங்களில் கசிந்த ஆவணங்களை ஆதரமாக எடுத்துக் கொள்ள முடியாது' என்று வாதாடியது. மத்திய அரசின் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. 

இதன் அர்த்தம் என்னவென்றால், ஊடகங்களில் கசிந்த ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் ஆதரமாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்பதுதான். 

தி இந்து ஆங்கில நாளிதழ், ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான பல ரகசிய ஆவணங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஆவணங்கள் மூலம் இந்து பத்திரிகை, ‘ராணுவ அமைச்சகம் சார்பில் ரஃபேல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தபோது, பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது. இது நாட்டுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தவில்லை' என்று கூறியது. 


 

.