வெளிநாடுகளில் வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு மறுப்பு!

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களிடமிருந்து வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரபு நாடுகளுக்கு செல்வதாக இருந்தது

வெளிநாடுகளில் வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு மறுப்பு!

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், கேரள மாநிலம் மிகவும் சேதமடைந்தது.

Thiruvananthapuram:

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களிடமிருந்து வெள்ள நிவாரண உதவி பெற, இன்று கேரள அமைச்சர்கள் 17 நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டனர். இதற்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்துள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இன்று அரபு நாடுகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் கேரள மக்களிடமிருந்து நிதி உதவி பெற திட்டமிட்டிருந்தார். அக்.21ஆம் தேதி கேரளாவிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கேரளாவின் 20 மாநில அமைச்சர்களில் 17பேர் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு, முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மட்டும் வெளிநாடுகளுக்கு சென்று வெள்ள நிவாரண நிதி திரட்ட அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு, வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களிடமிருந்து நிதி திரட்ட கேரள அமைச்சர்கள் 5 நாள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.