This Article is From Nov 23, 2019

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 26 மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!!

CSS திட்டப்படி மருத்துவக் கல்லூரி அமைப்பதில் 60 சதவீத தொகையான ரூ. 190 கோடியை மத்திய அரசு ஏற்கும். மாநில அரசு 130 கோடி ரூபாயை வழங்கி மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்படும். 

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 26 மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!!

2022 - 23-க்குள் மருத்துவக் கல்லூரிகள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. CSS எனப்படும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ், இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சாபே மக்களவையில் தெரித்தார். 

தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், லடாக், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமையவுள்ளன. 

ஏற்கனவே 2 கட்டங்களாக மத்திய அரசின் உதவியோடு மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தமிழ்நாட்டின் பெயர் இல்லாதிருந்த நிலையில், 3-வது கட்ட நடவடிக்கையின்போது தமிழகத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதிஅளித்துள்ளதுமத்தயஅரசு. 

மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன்படி, மொத்தம் 6 மருத்துவக் கல்லூரிகள் தலா ரூ. 325 கோடி செலவில் தொடங்கப்பட உள்ளன. 

CSS திட்டப்படி மருத்துவக் கல்லூரி அமைப்பதில் 60 சதவீத தொகையான ரூ. 190 கோடியை மத்திய அரசு ஏற்கும். மாநில அரசு 130 கோடி ரூபாயை வழங்கி மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்படும். 

.