எஸ்.டி.ஆர்.எஃப் (மாநில பேரிடர் படை) பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

பல மாநில அரசுகள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளன

எஸ்.டி.ஆர்.எஃப் (மாநில பேரிடர் படை) பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

சுகாதார பொருட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • சுகாதார பொருட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன
  • அத்தியாவசிய பொருட்களை வழங்க எஸ்.டி.ஆர்.எஃப்
  • தற்போது தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை
New Delhi:

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக்கொண்டார். மேலும் செய்தித்தாள்கள் விநியோகம், பால் சேகரிப்பு மற்றும் விநியோகம் மற்றும் சுகாதார பொருட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அச்சு ஊடகங்களின் கீழ் செயல்படும் செய்தித்தாள் விநியோகமும் அனுமதிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

"கை கழுவதற்கு பயன்படும் சோப்புகள், கிருமிநாசினிகள், ஷாம்புகள், தரை சுத்தம் செய்ய பயன்படும் திரவங்கள், சலவை தூள்கள், பற்பசை, சானிட்டரி பேடுகள் மற்றும் டயப்பர்கள், பேட்டரி செல்கள், சார்ஜர்கள் போன்ற சுகாதார பொருட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஊரடங்கினால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீடற்ற மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க எஸ்.டி.ஆர்.எஃப் (மாநில பேரிடர் படை) பயன்படுத்த/ மத்திய அரசு அனுமதித்துள்ளது.

கடந்த வாரம் பிரதமர் 21 நாள் ஊரடங்கினை அறிவித்தபோது, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் சிக்கல் இருக்காது என்று கூறினார், ஆனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் தொழிலாளர்களிடம் போலீசார் கடந்த வாரம் கடுமையாகவும் நடந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான தினசரி கூலித் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கினால் வேலை இழந்துள்ளனர். வாழ வழியின்றி அவர்கள் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அந்த தொழிலாளர்களின் நிலை கண்டு, பல மாநில அரசுகள் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளன. இருப்பினும், அவர்கள் தங்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கும் வைரஸைக் கொண்டு செல்லக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க உள்துறை அமைச்சகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசுகள் தங்கள் எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் புலம்பெயர்ந்த வரும் தொழிலாளர்கள் உட்பட நடுவழியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும் அது கேட்டுக் கொண்டது.

கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் 27 பேரைக் கொன்றுள்ளது. மேலும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 1000ஐ தூண்டியுள்ளது. உலகளவில் இந்த கொரோனா பாதிப்பால் 30,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.