This Article is From Jul 08, 2019

''பள்ளிகளில் மாணவ - மாணவிகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா'' : தமிழக முதல்வர் அறிவிப்பு

சட்டசவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழ முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.

''பள்ளிகளில் மாணவ - மாணவிகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா'' : தமிழக முதல்வர் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார். 

சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 163 கோடி செலவில் மேம்படுத்தப்படும். நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பு அறைகள், 85 நூலக அறைகள், 83 அறிவியல் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். 

அரசுப் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2,650 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 244 உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ. 21 கோடியே 71 லட்ச ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா சிசிடிவி வசதி அமைத்து தரப்படும். 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

.