This Article is From Jan 18, 2019

பாலியல் புகார் பெற்ற முன்னாள் சிஇஓவுக்கு இழப்பீடு மறுப்பு!

1998ல் சிபிஎஸ்-ன் சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2003ல் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.

பாலியல் புகார் பெற்ற முன்னாள் சிஇஓவுக்கு இழப்பீடு மறுப்பு!

12 பெண்கள் சிஇஓ லெஸ்லீ மூன்வெஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.

New York:

சிபிஎஸ் தொலைக்காட்சியின் முன்னாள் சிஇஓ லெஸ்லீ மூன்வெஸ், பாலியல் துன்புறுத்தல் புகார் காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய தொகையான 120 மில்லியன் டாலரை தற்போது தொலைக்காட்சி நிறுவனம் வழங்க மறுத்துள்ளது.

சிபிஎஸ் தொலைக்காட்சியின் போர்ட் எடுத்த முடிவில் பணிநீக்கம் செய்வதில் சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அவரது பணி ஒப்பந்தத்தை மீறியது, கார்ப்பரேட்டுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியது மற்றும் வேண்டுமென்றே நிகழ்த்திய தவறு ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு கிடைக்க வேண்டிய தொகையை வழங்க முடியாது என்று கூறியுள்ளது.

லெஸ்லீயின் ஒப்பந்தத்தின் படி, அவருக்கு 120 மில்லியன் டாலர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் விதிமுறைகளை மீறியதால் நிர்வாகம் வழங்க மறுக்கிறது.

12 பெண்கள் இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். 1995ல் சிபிஎஸ் தொலைக்காட்சியில் இணைந்த லெஸ்லீ அந்தத் தொலைக்காட்சியை அதிகம் பார்க்கும் சேனலாக மாற்றியதில் பெரும் பங்களிப்பை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

1998ல் சிபிஎஸ்-ன் சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2003ல் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.

.