'போலி சானிட்டைசர், தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் அதிகம் தயாரிக்கப்படலாம்' - சிபிஐ எச்சரிக்கை

சில  சமூக விரோத கும்பல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை  நிர்வாகிகளை நேரில் அணுகி, தாங்கள் மருத்துவ பொருள் தயாரிப்பாளர்கள் என அறிமுகம் செய்துகொண்டுள்ளனர்.  இதையடுத்து சானிடைசர், தனிநபர் பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றுக்காக ஆர்டர் எடுத்துள்ளனர். 

'போலி சானிட்டைசர், தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் அதிகம் தயாரிக்கப்படலாம்' - சிபிஐ எச்சரிக்கை

அனைத்து மாநில அரசுகள், போலீஸ் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

New Delhi:

கொரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி போலியாக அதிக எண்ணிக்கையில் சானிடைசர்கள், தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் தயாரிக்கப்படலாம் என சிபிஐ எச்சரிக்கை செய்துள்ளது.  இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகள், காவல்துறை அலுவலகங்களுக்கு சிபிஐ அறிக்கை அனுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக சிபிஐக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.  இதையடுத்து, எச்சரிக்கை செய்யும் விதமாக அனைத்து மாநில அரசுகள், போலீஸ் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

சில  சமூக விரோத கும்பல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை  நிர்வாகிகளை நேரில் அணுகி, தாங்கள் மருத்துவ பொருள் தயாரிப்பாளர்கள் என அறிமுகம் செய்துகொண்டுள்ளனர்.  இதையடுத்து சானிடைசர், தனிநபர் பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றுக்காக ஆர்டர் எடுத்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக ஆன்லைனில் ஆர்டர் கொடுக்கப்பட்டு பணமும் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனை ஆர்டர் செய்த பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை.  

இதேபோன்று இந்த கும்பல் கொடுத்துள்ள சானிடைசரும் போலியாக இருந்துள்ளது.  இதனால் அதிர்ச்சியுற்றவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்தியாவில் நடந்ததைப் போன்று மற்ற சில நாடுகளிலும்,  இதேமாதிரியான ஏமாற்று சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதையடுத்து, கவனத்துடன் இருக்குமாறு சிபிஐ எச்சரிக்கை செய்துள்ளது.