தமிழகத்தை அதிரவைத்த ஐ.டி ரெய்டு… 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்!

தமிழக நெடுஞ்சாலைத் துறையுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் எஸ்பிகே நிறுவனத்துக்குச் சொந்தமான 22 இடங்களில் நேற்று ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகத்தை அதிரவைத்த ஐ.டி ரெய்டு… 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்!
Chennai: 

தமிழக நெடுஞ்சாலைத் துறையுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் எஸ்பிகே நிறுவனத்துக்குச் சொந்தமான 22 இடங்களில் நேற்று ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 100 கிலோ தங்கம் மற்றும் 160 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெய்டு நடத்தப்பட்டதில் 17 இடங்கள் சென்னையிலும், 4 இடங்கள் அருப்புக்கோட்டையிலும், 1 இடம் வேலூரிலும் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

இதுவரை நாட்டில் நடந்த ஐ.டி ரெய்டிலேயே இதில் தான் அதிக அளவு பணப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் நடத்தப்பட்ட ஒரு ரெய்டில் 110 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தான் அதிகபட்சத் தொகையாக இருந்து வந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அந்த ரெய்டு நடத்தப்பட்டது. கைப்பற்றப் பொருட்களில் பெரும்பான்மையானவை டிராவல் பேக்குகளிலும், பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்களில் இருந்ததாக தெரிகறது. எஸ்.பி.கே நிறுவனத்துக்கு ஆளுங்கட்சி வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்.பி.கே நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தகவல் வந்ததையடுத்து வருமான வரித் துறை இந்தச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து இன்றும் எஸ்.பி.கே நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் இன்றும் ரெய்டு நடக்கும் என்று கூறப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................