‘இவ்வளவு பெருசா, வெளிச்சமான விண்கல்லை பார்த்திருக்கீங்க..?’- ஆஸி.,யில் நிகழ்ந்த அதிசயம்

விண்கல் விழுந்த சமயத்தில், அதைத் தற்செயலாக சில சிசிடிவி கேமராக்கள் வீடியோ எடுத்துள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘இவ்வளவு பெருசா, வெளிச்சமான விண்கல்லை பார்த்திருக்கீங்க..?’- ஆஸி.,யில் நிகழ்ந்த அதிசயம்

ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் விழுந்துள்ள இரண்டாவது விண்கல் இதுவாகும்


தெற்கு ஆஸ்திரேலியாவில் விண்கல் ஒன்று, ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்தபோது மிகப் பிரசமாக எரிந்துள்ளது. அப்படி வந்த விண்கல், ஒரு காரின் அளவைவிட பெரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகியுள்ள வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. 

தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா பகுதிகளில் இந்த விண்கல் தெரிந்ததாக ஏபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகாயத்தில் இருந்து வந்த விண்கல், க்ரேட் ஆஸ்தரேலியன் பைட் கடற்பரப்பில் விழுந்தது. 

மெர்சல் வீடியோவை கீழே பாருங்கள்:

விண்கல் விழுந்த சமயத்தில், அதைத் தற்செயலாக சில சிசிடிவி கேமராக்கள் வீடியோ எடுத்துள்ளன. அந்த வீடியோக்கள்தான் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் விழுந்துள்ள இரண்டாவது விண்கல் இதுவாகும். இதற்கு முன்னர் நாட்டின் வடக்கு எல்லைக்குப் பக்கத்தில் விண்கல் ஒன்று விழுந்தது பரபரப்பைக் கிளப்பியது. 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................