தானமளித்தவரின் திருமணதுக்கு சென்ற சிறுமி - நெகிழ வைத்த நிகழ்வு

கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்கை சேவரன்-மெக்கார்மிக்கு ஒரு வயது இருக்கும் போதே புற்றுநோய் கண்டறியப்பட்டது

 Share
EMAIL
PRINT
COMMENTS
தானமளித்தவரின் திருமணதுக்கு சென்ற சிறுமி - நெகிழ வைத்த நிகழ்வு

கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்கை சேவரன்-மெக்கார்மிக்கு ஒரு வயது இருக்கும் போதே புற்றுநோய் கண்டறியப்பட்டது. மிகவும் அரிய வகை புற்றுநோயான juvenile myelomonacytic leukemia இரத்தப் புற்றுநோயால் சிறு வயதிலேயே பாதிக்கப்பட்ட இச்சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் முன் பின் தெரியாத நபரின் உதவியால் அச்சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஹேடன் ஹாட்பீல்ட் ரைல்ஸ் என்ற பெண், தான் கல்லூரி படிக்கும் போது தன்னார்வ நிறுவனத்தில் தன் எலும்பு மஜ்ஜையை தானம் அளிப்பதாக பதிவிட்டிருந்தார். ஒரு வருடம் கழித்து அந்த நிறுவனத்திலிருந்து இச்சிறுமியைப் பற்றி கூறியவுடன் தான் எலும்பு மஜ்ஜை தானம் செய்ய விரும்புவதாக கூறினார். இதனால் சிறுமிக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது மட்டுமல்லாமல் சுத்தமான இரத்தமும் கிடைத்தது. அக்குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கும் வழிவகுத்தது என்று ஹேடன்னின் ஃபோட்டோ கிராபர் ஜென்னி பிராட்வே தனது வலைத்தளத்தில் ஜூன் 21 ல் பதிவிட்டிருந்தார்.

ஹேடன், ஸ்கையை மணப்பெண் தோழியாக அழைத்திருந்த நிலையில் ஸ்கை உடல் நிலை சீராகும் வரை எங்கும் பயணம் செல்வது கடினம் என அவரது மருத்துவர் கூறியிருந்தார். அதனால் ஸ்கை திருமணத்திற்கு கலிபோர்னியாவிலிருந்து அலபாமாவுக்கு வருவது உறுதியாக இல்லை . ஆனால் கடைசி சில நாட்களில் அவர் பயணம் மேற்கொள்ள மருத்துவர் அனுமதி அளித்தார்.

ஹேடன் மற்றும் அட்ரியன் திருமணத்தில் ஸ்கை மணப்பெண் தோழியாக வலம் வந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் அனைவரையும் நெகிழ வைத்தது இணையதளத்தில் வைரலானது.

 

flower girl
 
flower girl

அந்த இடத்தில் இருந்த அனைவரின் கண்களும் கண்ணீரால் நிறம்பியது,என திருமணத்தை புகைப்படம் எடுத்த ஜென்னி சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மார்க்கும் நானும் ஹேடன் இது போன்ற ஒரு விஷயம் செய்திருப்பார் என்று நினைக்கவில்லை! நாங்கள் திருமணத்திற்கு முன் ஹேடனின் தாயை சந்தித்தோம். அவர் ஹேடனின் தானம் பற்றி கூறினார். நாங்கள் ஆதிர்ச்சியடைந்தோம், உடனடியாக அழுதுவிட்டேன், என "ஜென்னி தனது வலைப்பதிவில் எழுதினார்.

flower girl
flower girl

மேலும் அங்கு அவர் திருமணத்தில் படங்களாக எடுத்த விலை மதிப்பில்லாத தருணங்களை பகிர்ந்திருந்தார்.

 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................