இந்தப் படத்தில ஒரு சிறுத்தை இருக்கு… அது உங்களுக்குத் தெரியுதா..? #ViralPic

Viral Photo - சிலர் அதை கண்டுபிடித்தும் விட்டனர். அது குறித்த தங்களது ரிப்ளையிலும் சிறுத்தை எங்கு இருக்கிறது என்பதை வட்டமிட்டுக் காண்பித்துள்ளனர். 

இந்தப் படத்தில ஒரு சிறுத்தை இருக்கு… அது உங்களுக்குத் தெரியுதா..? #ViralPic

Viral Image - உங்களால் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பலரும் உங்களைப் போலத்தான் குழம்பியுள்ளனர்.

ஒரு படத்தில் இருக்கும் சிறுத்தை இருந்தால், அதைக் கண்டுபிடிப்பது சுலபம்தானே… அதான் இல்லை. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு ‘சிறுத்தை' படத்தில், அது எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க நெட்டிசன்ஸ் திணறி வருகின்றனர். Bella Lack என்கிற ட்விட்டர் பயனர், ட்விட்டரில் இந்த ‘சிறுத்தை' படத்தைப் பகிர்ந்து, மற்றவர்களை, அது எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறியுமாறு கேட்டுள்ளார். 

முதலில் தனக்கு இந்த போட்டோ வந்தபோது, லேக், பொய் என்றுதான் நினைத்துள்ளார். ஆனால், வெகு நேரத்துக்குப் பின்னர் சிறுத்தை இருந்ததைப் பார்த்த பின்னர்தான், அதில் இருக்கும் உண்மை அவருக்குப் புரிந்ததாகச் சொல்கிறார். 

படத்தில் மண்ணோடு மண்ணாக படுத்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. உங்களுக்கு அது தெரிகிறதா என்று பாருங்கள்:
 

உங்களால் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பலரும் உங்களைப் போலத்தான் குழம்பியுள்ளனர். 

சிலர் அதை கண்டுபிடித்தும் விட்டனர். அது குறித்த தங்களது ரிப்ளையிலும் சிறுத்தை எங்கு இருக்கிறது என்பதை வட்டமிட்டுக் காண்பித்துள்ளனர். 

பல ட்விட்டர் பயனர்கள், இதைப் போன்று சிறுத்தை மறைந்திருக்கும் வேறு படங்களை பகிர்ந்தனர். 

Click for more trending news


More News