அனுஷ்காவும் ஷாக்‌ஷியும் பள்ளி தோழிகள்: தோனி - கோலியின் மற்றொரு ஒற்றுமை!

பள்ளி புகைப்படத்தில் உங்களால் அனுஷ்கா மற்றும் ஷாக்‌ஷி இருவரையும் அடையாளம் காண முடிகிறதா?

 Share
EMAIL
PRINT
COMMENTS
அனுஷ்காவும் ஷாக்‌ஷியும் பள்ளி தோழிகள்: தோனி - கோலியின் மற்றொரு ஒற்றுமை!

தற்போது இணையதளத்தில் இருவரும் பள்ளிப்பருவத்திலிருந்து ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. அனுஷ்கா மற்றும் ஷாக்‌ஷி இருவரின் பழைய புகைப்படங்கள் வெளியாகின்றன
  2. இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர்
  3. 2013ம் ஆண்டு நடந்த விழாவில்தான் இருவருக்கும் இது தெரிய வந்துள்ளது

இந்திய கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும், இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி ஷாக்‌ஷியும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றால் நம்பமுடிகிறதா?  ஆனால் இணையதளத்தில் இருவரும் பள்ளிப்பருவத்திலிருந்து ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

அனுஷ்கா ஷர்மாவும், ஷாக்‌ஷியும் அஸாமில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் ஒன்றாக படைத்தவர்கள் என்று தெரிகிறது. இது இருவருக்குமே சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதுதான் தெரிய வந்துள்ளது.

அந்தப் பள்ளிப் புகைப்படத்தில் அழகாக ஆடை அணிந்த குழந்தையாக ஷாக்‌ஷியும், வலது ஓரத்தில் அனுஷகாவும் இருப்பதை பார்க்க முடிகிறது. பள்ளி புகைப்படத்தில் உங்களால் இருவரையும் அடையாளம் காண முடிகிறதா?

2013ம் ஆண்டு நடந்த விழாவில்தான், அவர்கள் பள்ளித்தோழிகள் என்பது தெரியவந்துள்ளது. அதில் பேசிய அனுஷ்கா ஷர்மா, "நானும் ஷாக்‌ஷியும் அஸாமில் சிறு நகரத்தில் வசித்து வந்தோம். இப்போதுதான் ஷாக்‌ஷியின் ஊர் பற்றி கேட்டேன் அப்போதுதான் எனக்கு இது தெரியவந்தது. இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்துள்ளோம்" என்று கூறினார்.

பள்ளி நாட்களில் ஷாக்‌ஷி மிகவும் ஜாலியான பெண்ணாக வலம் வந்திருக்கிறார். ஷாக்‌ஷி மற்றும் அனுஷ்கா இருவரும் கோலி மற்றும் தோனியுடன் இந்திய தொடரில் இணைந்திருப்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது.

அனுஷ்கா நடித்து கடைசியாக வெளிவந்த படம் ஜீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................