மற்ற நெட்வொர்க்கிற்கான இலவச அழைப்புகளை நிறுத்தியது ஜியோ! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

IUC கட்டணத்தை TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஒருவேளை TRAI அமைப்பு IUC கட்டணத்தை ரத்து செய்தால், ஜியோவின் எல்லா அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
மற்ற நெட்வொர்க்கிற்கான இலவச அழைப்புகளை நிறுத்தியது ஜியோ! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

இனி ஜியோவில் இருந்து ஜியோவுக்கு செய்யப்படும் அழைப்புகள் மட்டுமே இலவசமாக இருக்கும்


இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வர் முகேஷ் அம்பானியால் இயக்கப்பட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜியோவைத் தவிர்த்து மற்ற மொபைல் நெட்வொர்க்குகளுக்கான இலவச அழைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

இனி ஜியோவில் இருந்து ஜியோவுக்கு செய்யப்படும் அழைப்புகள் மட்டுமே இலவசமாக இருக்கும். ஜியோவில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட மற்ற நெட்வொர்க்குகளுக்கு கால் செய்தால், நிமிடம் ஒன்றுக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்ற ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களை பொறுத்தளவில், மற்ற நெட்வொர்க்குகளுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு IUC எனப்படும் Interconnect Usage Charge கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஜியோ செலுத்தி விட்டு, அழைப்புகளை இலவசமாக்கியது. 

அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஜியோ நிறுவனம் ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 500 கோடி வரையில் செலுத்தியாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

IUC கட்டணத்தை TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஒருவேளை TRAI அமைப்பு IUC கட்டணத்தை ரத்து செய்தால், ஜியோவின் எல்லா அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................