மேற்கு வங்கத்தில் பாஜக பேரணிக்கு அனுமதியளிக்க நீதிமன்றம் மறுப்பு

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அனுமதி அளிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணிக்கு அனுமதியளிக்க நீதிமன்றம் மறுப்பு

பாஜகவை பார்த்து மம்தா பானர்ஜி அச்சத்தில் உள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார்.

Kolkata:

மேற்கு வங்கத்தில் பாஜக பேரணி நடத்துவதற்கு அனுமதியளித்திருந்த நிலையில் அதனை தற்காலிகமாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. மாநில அரசு செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று இன்றைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ரத யாத்திரைக்கு நேற்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அப்போது, மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு தரப்பில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி ரத யாத்திரைக்கு அனுமதி அளித்ததோடு, அதற்கு முறையான பாதுகாப்பை மாநில அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டை மாநில அரசு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டெபசிஷ் கர்குப்தா மற்றும் நீதிபதி சம்பா சர்கார் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

முன்னதாக, சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற அமர்வு மீண்டும் இதனை ஒருநபர் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. உளவுத்துறை அதிகாரிகள் அளித்த 36 முக்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு பிரசாரம் செய்யும் விதமாக பாஜக ரத யாத்திரையை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது. தற்போது உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவை பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.