This Article is From Dec 29, 2019

‘மக்களின் நம்பிக்கையை மோடியும், அமித் ஷாவும் இழந்து விட்டனர்’ – காங்கிரஸ் கடும் விமர்சனம்

All India Congress Committee (AICC) காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சியின் மூத்த தலைவர்களான திக் விஜய்சிங் உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர்.

‘மக்களின் நம்பிக்கையை மோடியும், அமித் ஷாவும் இழந்து விட்டனர்’ – காங்கிரஸ் கடும் விமர்சனம்

மோடியும், அமித் ஷாவும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக போராட்டங்களை சுட்டிக்காட்டி திக் விஜய் சிங் விமர்சித்துள்ளார்.

New Delhi:

மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இழந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான திக் விஜய் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திக் விஜய் சிங் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘பிரதமர் மோடி, அனைவருக்குமான வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற கோஷத்தை முன் வைத்தார். இன்றைக்கு மோடியும், அமித் ஷாவும் மக்களின் நம்பிக்கையை இழந்து நிற்கின்றனர்' என்று கூறினார்.

சர்ச்சைக்குரிய குடிமக்கள் சட்ட திருத்தத்தை காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதற்கொண்டே தீவிரமாக எதிர்த்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும், புதுவை, பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று முதல்வர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை மாநில அரசுகள் நிறைவேற்ற மறுப்பு தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் போராட்டங்களில் காங்கிரஸ் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருகின்றனர். சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. முதன்முறையாக மத பாகுபாடு அடிப்படையில்  அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி செய்கிறது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேச நாடுகளில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் அந்நாட்டு சிறுபான்மையினருக்கு குடியுரிமை சட்ட திருத்தம் உதவும் என்று மத்திய அரசு கூறுகிறது. மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பது அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்று கூறி போராட்டங்கள் நடக்கின்றன.

இந்த நிலையில், மோடியும், அமித் ஷாவும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக போராட்டங்களை சுட்டிக்காட்டி திக் விஜய் சிங் விமர்சித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிறுவன விழாவில் திக் விஜய் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘இன்றைக்கு நாம் கட்சியின் நிறுவன நாளை கொண்டாடுகிறோம். பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக போராடுவோம் என்று உறுதியேற்றுக் கொள்வோம்' என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

.