போக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டம் வாபஸ்! தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான பேருந்துகள் ஓடாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
போக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டம் வாபஸ்! தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு


சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இன்று காலை நடந்த போராட்டத்தில் 23,000 போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால், நகரில் இயங்கி வந்த 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மக்கள் ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சனை எழுந்தது.

சென்னை மாநகரப் போக்குவரத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படும். ஆனால், ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்னும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை, என்றும் ஒரு சிலருக்கு முழு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இன்று காலை முதல் பேருந்தை இயக்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மறுத்துவிட்டனர்.

இப்போராட்டத்தில் சிஐடியு, திமுகவின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, அண்ணா நகர் மேற்கு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பல பணிமனைகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ மாணவிகளும், பணி நிமித்தமாக செல்லுபவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

எனினும், ஊதியம் நிலுவையில் வழங்கப்படவில்லை என்று கூறும் தமிழக அரசு, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களுக்கு ஏற்கனவே முழு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. மேலும் மீதமுள்ள தொகை இன்று வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. வார இறுதியில் வங்கிகள் மூடப்பட்டதால் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்ந்து, ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள நிலையில், போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஜூன் மாத ஊதியத்தில் நிலுவையில் உள்ள 38 சதவீத தொகை இன்று மாலைக்குள் செலுத்தப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................