This Article is From Nov 08, 2019

அதிதீவிர புயலாக உருவெடுத்த ‘Bulbul’… கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை!

Heavy Rain for TN - சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். 

அதிதீவிர புயலாக உருவெடுத்த ‘Bulbul’… கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை!

Heavy Rain for TN - புல் புல் புயலானது, தற்போது அதிதீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

Heavy Rain for TN - வங்கக் கடலில் நிலை பெற்றுள்ள ‘புல் புல்' (Bulbul) புயலானது, அதிதீவிர நிலையை அடைந்துள்ளது என்றும் மேலும், தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர், புவியரசன் தெரிவிக்கையில், “வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சேலம், தர்மபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். 

புல் புல் புயலானது, தற்போது அதிதீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று கூறினார். 


 

.