This Article is From Dec 21, 2018

‘அனுமான் ஒரு முஸ்லிம்..!’- உ.பி., பாஜக தலைவர் கண்டுபிடிப்பு

Lord Hanuman Was Muslim: உத்தர பிரதேசத்தில் உள்ள பாஜக-வைச் சேர்ந்த கவுன்சிலர், புக்கால் நவாப், ‘உண்மையில் அனுமான் ஒரு முஸ்லிம்’ என்று பேசியுள்ளார்.

‘அனுமான் ஒரு முஸ்லிம்..!’- உ.பி., பாஜக தலைவர் கண்டுபிடிப்பு

ஹைலைட்ஸ்

  • அனுமான் எல்லோராலும் விரும்பப்பட்ட கடவுள், நவாப்
  • முஸ்லிம்களின் பெயர்களும் அனுமான் பெயரும் ஒத்துப் போகின்றது, நவாப்
  • உ.பி, பாஜக கவுன்சிலர் நவாப்
Lucknow:

இந்து கடவுளான அனுமான் குறித்தான சர்ச்சையை முதன் முதலில் துவங்கி வைத்தது, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான். 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ‘அனுமான் ஒரு தலித்' என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள பாஜக-வைச் சேர்ந்த கவுன்சிலர், புக்கால் நவாப், ‘உண்மையில் அனுமான் ஒரு முஸ்லிம்' என்றுள்ளார்.

இது குறித்து நவாப் மேலும் கூறுகையில், ‘அனுமான், மொத்த உலகிற்கும் சொந்தமானவர். அனைத்து மதத்தினராலும், அனைத்து சமூகத்தினராலும் அவர் விரும்பப்பட்டார். எனது நம்பிக்கையைப் பொறுத்தவரை அவர் ஒரு முஸ்லிம்' என்று கூறியுள்ளார்.

vht8k9v8

அவர் மேலும், ‘எங்கள் மதத்தில் இருப்பவர்களின் பெயர்களை உற்று கவனியுங்கள். ரஹ்மான், ரம்ஜான், ஃபர்மான், குர்பான், ஜிசான் போன்றவை அனுமானுடன் ஒத்துப் போகிறதல்லவா?' என்றுள்ளார்.

நவாப், இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த 2017-ல் சமாஜ்வாடி கட்சியின் அங்கமாக அவர் இருந்தபோது, ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நான் 15 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன்' என்று கூறினார். இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார்.

ஆதித்யநாத் பல வாரங்களுக்கு முன்னர், அனுமான் பற்றி கூறிய கருத்து இன்னும் சர்ச்சையைக் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

.