This Article is From Aug 24, 2019

மகாராஷ்டிராவில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது -இருவர் பலி

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தின் கான்கிரீட் சரிவுகளுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்டு படையினர் மீட்பு பணியில் உள்ளனர்.

Bhiwandi building collapse: இரண்டுபேர் பலியாகியுள்ளனர். மேலும், இரண்டு அல்லது மூன்று பேர் சிக்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஹைலைட்ஸ்

  • Cracks were seen in the eight-year-old "illegal" building: Official
  • Municipal agency had evacuated 22 families on Friday night
  • People got trapped when trying to collect belongings, said officials
Bhiwandi, Maharashtra:

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் நேற்றிரவு நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டுபேர் பலியாகியுள்ளனர். மேலும், இரண்டு அல்லது மூன்று பேர் சிக்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து நகராட்சி நிர்வாகம் 22 குடும்பங்களை வெள்ளிக்கிழமை இரவு வெளியேற்றியது. இருப்பினும் சிலர் தங்கள் உடமைகளை சேகரிக்க கட்டிடத்திற்குள் திரும்பிச் சென்றபோது கட்டிடம் இடிந்து விழுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தின் கான்கிரீட் சரிவுகளுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்டு படையினர் மீட்பு பணியில் உள்ளனர். 

e04sceo

மாநகராட்சி ஆணையர் அசோக் ரன்காம்ப் “நாங்கள் முழு கட்டிடத்தையும் காலி செய்திருந்தோம். ஆனால் அது இடிந்து விழுவதற்கு முன்னர் சிலர் அனுமதியின்றி உள்ளே நுழைந்தனர்” என்று தெரிவித்தார்.

மேலும் இது எட்டு ஆண்டு பழமையான கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது. விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 

.