தாய்பால் வாரம் 2019 : தாய்பாலின்றி அமையாது குழந்தைகளின் ஆரோக்கியம்

இந்திய அரசு குழந்தைகளுக்கான உணவு பொருட்களில் ‘தாய்பாலுக்கு மாற்றானது’ அல்லது ‘தாய்பாலுக்கு இணையானது’  என்ற வாசகத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தாய்பால் வாரம் 2019 : தாய்பாலின்றி அமையாது குழந்தைகளின் ஆரோக்கியம்

பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைகளுக்கு தாய்பாலுக்கு இணையான உணவு ஏதுமில்லை. அதனால் இந்திய அரசு குழந்தைகளுக்கான உணவு பொருட்களில் ‘தாய்பாலுக்கு மாற்றானது' அல்லது ‘தாய்பாலுக்கு இணையானது'  என்ற வாசகத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது. தாய்பாலுக்கு மாற்று என்று எதுவும் இல்லை. தாய்பாலில் மட்டுமே குழுந்தையின் உடலுக்கு ஆரோக்கியத்தை சரிவிகிதத்தில் கொடுக்க முடியும். 

குழந்தை பெற்றெடுத்த ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் 850 மில்லி அளவு பால் சுரக்கும். இதனால் பெண்ணின் உடல் கூடுதலாக 600 கலோரிகள் செலவழியும். அதனால் தான் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதால் நுண்ணறிவுத் திறனும்  நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.  குழந்தை அடிப்படை ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

breast feeding

தாய்ப்பாலினால் குழந்தைக்கு மட்டும் நன்மையல்ல;  பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவது குறைவு என பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. தாய்பால் கொடுப்பதினால் பெண்களுக்கு உடல் எடை கூடுவதில்லை, பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பந்தம் உருவாகிறது. குழந்தைகள் பாதுகாப்பான இடமாக தாயினை உணர்வார்கள். தொடர்ந்து கொடுக்கும் பொழுது நெருக்கம் காட்டுவதுடன் விளையாடவும் செய்வார்கள். 

பொதுவாக ஆரோக்கியமான காய்கறி உணவுகளை சாப்பிட்டாலே குழந்தைகளுக்கு தேவையான பால் சுரப்பு இருக்கவே செய்யும். கருத்தடைக்காக மருந்துகள் எடுத்திருந்தாலோ அல்லது மார்பு அறுவை சிகிச்சையேதும் செய்திருந்தாலோ பால் சுரப்பு குறைவதற்கு வாய்ப்பு உண்டு. 

breast feeding breast feeding your child

Photo Credit: iStock

தாய்பால் கொடுக்கும் போது ஒரு மூடநம்பிக்கை உண்டு. மார்பக அளவு பெரிதாக இருந்தால்தான் தாய்பால் சுரப்பு அதிகமாக இருக்கும் என்று சிலர் எண்ணுவதுண்டு. ஆனால், தாய்பால் சுரப்புக்கும் மார்பக அளவிற்கும் எந்த வித தொடர்பு ம் இல்லை. சிறிய மார்பகம் உள்ளவர்களுக்கு கூட தாய்ப்பால் சுரப்பு நன்றாகவே இருக்கும். 

தாய்பால் என்பது பிறந்த ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமையாக கருத வேண்டும். தாய்பாலின் வழி கிடைக்கும் ஆரோக்கியம் குழந்தைகளின் ஒட்டுமொத்த வாழ்வுக்கும் அவர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................