கொரோனா குவாரன்டீனிலிருந்த பிரேசில் அதிபரை கடித்தப் பறவை… வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!

உலகிலேயே அமெரிக்காவுக்குப் பின்னர் பிரேசில்தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு. 

கொரோனா குவாரன்டீனிலிருந்த பிரேசில் அதிபரை கடித்தப் பறவை… வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!

பறவைத் தாக்கிய பின்னர் வலியில் போல்சோனரோ துடிப்பது படங்களில் நன்றாகத் தெரிகிறது. 

பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனரோவுக்கு சென்ற வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இப்படியான இக்கட்டான நேரத்தில் அவரை, ஒரு பறவைக் கடித்துள்ளது. இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சிக் கிளப்பியிருக்கிறது. 

பிரேசில் நாட்டு அதிபர்களுக்கான அதிகாரப்பூர்வ இல்லமான பலாசியோ டா அல்வோரடாவில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் தங்கியுள்ளார் போல்சோனரோ. தன் வீட்டிலேயே உள்ள, ஈமு கோழி வகையிலான ரியா (Rhea) பறவைக்கு அவர் உணவு கொடுத்துள்ளார். அதில் ஒரு பறவை, அவர் எதிர்பாராத விதமாக கடித்துவிட்டது. அதிபர் போல்சோனரோ, இல்லத்துக்கு வெளியே வந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் செய்தியாளர்கள் பலர் அவரை படமெடுத்துக் கொண்டிருந்தனர். இப்படியான நேரத்தில்தான் பறவை, போல்சோனரோவைத் தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

பறவைத் தாக்கிய பின்னர் வலியில் போல்சோனரோ துடிப்பது படங்களில் நன்றாகத் தெரிகிறது. 
 

கடந்த திங்கட் கிழமையன்று சிஎன்என் பிரேசில் செய்தி நிறுவனத்திடம் பேசிய போல்சோனரோ, “விரைவில் நான் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறேன். அந்த சோதனை முடிவுக்காக மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன். காரணம் என்னால் இந்த குவாரன்டீன் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வீட்டில் இருப்பது மிகவும் கொடுமையாக உள்ளது. 

என் உடல்நிலை மிக நன்றாக உள்ளது. எனக்கு காய்ச்சலோ அல்லது மூச்சு விடுவதில் எந்தவித சிரமமோ இல்லை” என்றார். பொதுவாக கொரோனா தொற்று வருபவர்களுக்கு, உணவை சுவைக்கும் திறன் சில நாட்களக்கு இல்லாமல் போய்விடும். ஆனால், அதைப் போல எந்த அறிகுறிகளும் போல்சோனரோவுக்கு இருக்கவில்லை. 

உலகிலேயே அமெரிக்காவுக்குப் பின்னர் பிரேசில்தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு. 

Click for more trending news