பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர்தப்பிய 3 வயது சிறுவன்! - மனதை உருக்கும் புகைப்படம்!

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தனது தாத்தாவின் ரத்தம் சிதறி கிடக்கும் உடலின் மீது அமர்ந்திருக்கிறான். அவனை போலீசார் அழைத்துச் செல்லும் போது கடுமையான பயத்துடன் செல்கிறான். 

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர்தப்பிய 3 வயது சிறுவன்! - மனதை உருக்கும் புகைப்படம்!

Sopore, Jammu And Kashmir:

ஜம்மு-காஷ்மீரின் சோபோரின் டவுனில் இன்று காலை சிர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 3 வயது சிறுவன் உயிர்தப்பயுள்ளான். எனினும், சிறுவனை அழைத்து வந்த அவனது தாத்தா உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரரும் உயிரிழந்துள்ளார்.  

இதுதொடர்பான மனதை கனக்க வைக்கும் அந்த புகைப்படத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தனது தாத்தாவின் ரத்தம் சிதறி கிடக்கும் உடலின் மீது அமர்ந்திருக்கிறான். அவனை போலீசார் அழைத்துச் செல்லும் போது கடுமையான பயத்துடன் செல்கிறான். 

காஷ்மீர் போலீசார் சிறுவனை பத்திரமாக தூக்கிச்செல்லும் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

hiu2t8hc

தாத்தாவின் உடலின் மீது அமர்ந்திருக்கும் சிறுவன்

மேலும், அந்த பதிவில், சோபோரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர்தப்பிய 3 வயது சிறுவனை ஜம்மு-காஷ்மீர் போலீசார் மீட்டு அழைத்துச்செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீநகரில் இருந்து ஹாந்தவாராவுக்கு தனது தாத்தாவுடன் மாருதி காரில் சென்றுள்ளான். அப்போது, சோபேர் அருகே சென்ற போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர்கள் சென்ற காரின் மீதும் குண்டுகள் பாய்ந்துள்ளன. 

08t647ok

சிறுவனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட போலீசார்

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, பயங்கரவாதிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குததில் ஈடுபட்டனர். இதில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். சிஆர்பிஎப் வீரர்கள் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். 

கடந்த வாரம் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில், 6 வயது சிறுவன் உயிரிழந்தான். நிஹான் என்ற அந்த சிறுவன் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், கார் கண்ணாடிகளை துளைத்து சிறுவன் மீது குண்டுகள் பாய்ந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒரு வீரர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.