This Article is From Apr 23, 2019

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் போட்டி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கும் வாய்ப்பளித்ததற்கு விஜயேந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் போட்டி!

நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது என விஜயேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

New Delhi:

மக்களவைத் தேர்தலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரஸ் சார்பில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னதாக காங்கிரஸ் சார்பில், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதில், டெல்லியில் 3 முறை முதல்வராக இருந்தவரும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 7வது வேட்பாளராக விஜயேந்தர் சிங்க்கு டெல்லி தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயேந்தர் சிங் கூறும்போது, குத்துச்சண்டை போட்டிகளில் 20 வருடங்களுக்கும் மேலான எனது பயணத்தில், எனது நாட்டை எப்போதும் பெருமைப்பட வைத்துள்ளேன். தற்போது, நாட்டு மக்களுக்கு எதாவது செய்ய வேண்டிய நேரம். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்த காங்கிரஸூக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டிருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

விஜயேந்தர் சிங் குத்துச்சண்டை போட்டியை நாட்டில் பிரபலான விளையாட்டாக மாற்றியவர் என்ற புகழாரம் சூடப்பட்டவர். 2010ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்மஸ்ரீ விருதை வென்றவர் ஆவார்.

டெல்லியில் வரும் மே.12ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

டெல்லியின் வடகிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில், சமீபத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஷீலா தீட்சித் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது முன்னோடியான அஜய் மேக்கான் புது டெல்லியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதைபோல், கிழக்கு டெல்லி தொகுதியில் அரவிந்தர் சிங் லவ்லியும், சாந்தினி செளவுக் தொகுதியில் ஜெ.பி.அகர்வாலும், வடமேற்கு தொகுதியில் ராஜேஷ் லிலோத்தியாவும், மேற்கு டெல்லியில் மஹாபால் மிஷ்ராவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதில், ஷீலா தீட்சித் எங்கு போட்டியிட உள்ளார் என்பதை அவரே தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் தலைமை கூறியதாகவும், அவரே வடகிழக்கு டெல்லியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், மக்களவைத் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் ஆம் ஆத்மி கடந்த வாரம் தனது வேட்பாளர் பெயர் பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் கூட்டணிக்காக பல கட்ட பேச்சுவராத்தையை ஆம் ஆத்மி நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.

.