பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மரணம்!

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும், பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ்வாக வந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மரணம்!
Mumbai:

சரோஜ் கான் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நிர்மலா நக்பால் பாலிவுட்டின் பழம்பெரும் நடன இயக்குநராவார். மூன்று முறை தேசிய விருதுகளை பெற்ற இவர் கடந்த 40 வருடங்களாக, 2000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களில் நடனப் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், "இந்திய நடன பயிற்சியின் தாய்" என அழைக்கப்படும் இவர் தனது 71வது வயதில் ஜூன்20 அன்று மும்பையில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2:30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், நோய் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும், பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ்வாக வந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.