இலங்கை: சர்ச், ஓட்டல்களில் குண்டுவெடிப்பு! – 3 இந்தியர்கள் உட்பட 207 பேர் பலி!!!

Sri Lanka Blast: இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தன. குறிப்பாக சர்ச்சுகளில் நடந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இலங்கை: சர்ச், ஓட்டல்களில் குண்டுவெடிப்பு! – 3 இந்தியர்கள் உட்பட 207 பேர் பலி!!!

Sri Lanka Bomb Blast: திடீர் தாக்குதலால் இலங்கை முழுவதும் பெரும் அதிர்ச்சி காணப்படுகிறது.


Colombo: 

Easter 2019: இலங்கையில் சர்ச், ஓட்டல்கள் மீது இன்று காலை முதல் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்ற விவரம் உடனடியாக தெரியவரவில்லை. மொத்தம் 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

31q5dmmg

தலைநகர் கொழும்புவுக்கு சற்று தொலைவில் இருக்கும் நிகோம்போ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்கு வந்த சூழல் குண்டுவெடிப்பு நடந்துள்து.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மொத்தம் 6 சதவீத கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்கள் தமிழ் மற்றும் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள்.

இந்திய நேரப்படி காலை 8.45-க்கு குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. இந்த தாக்குதலை கண்டித்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கோழைத்தனமான தாக்குதலை கண்டிப்தாகவும், இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இலங்கை அரசு துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். 

குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கை அரசின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. நிலைமையை மத்திய வெளியுறவு அமைச்சகமும், இலங்கையில் உள்ள இந்திய அதிகாரிகளும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உதவிகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு +94777903082 +94112422788 +94112422789 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. 



லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................