மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா! இருக்கைக்கு அழைத்துச் சென்று வாழ்த்து கூறிய மோடி!

ராஜஸ்தான் மாநிலம் கோடா நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக எம்.பி.யாக ஓம் பிர்லா 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

பாஜக எம்.பி ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


New Delhi: 

17வது மக்களவையின் சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பியை, சபாநாயகராக தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்ததால், ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபாநாயகர் ஓம் பிர்லாவை, சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்தி மோடி வாழ்த்து கூறினார். தொடர்ந்து அவரை வாழ்த்தி பேசிய மோடி,

ராஜஸ்தானின் கோடா நகரில் பட்டினியே இல்லாத நிலையை ஏற்படுத்தியவர் ஓம் பிர்லா. கோடா நகர மக்களுடன் நெருக்கமாக பணியாற்றிய ஓம் பிர்லா உணவு, தண்ணீர், உடை ஆகியவை தேவைப்படுவோருக்கு உடனுக்குடன் உதவியவர். ஒருநாள் கூட ஒய்வின்றி மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர்.

ராஜஸ்தான் மாநில மக்களுக்காக அயராது பாடுபட்ட ஓம் பிர்லா, புதிய சபாநாயகராக இனி ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக இருப்பார் என பிரதமர் மோடி புகழ்ந்து கூறினார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக 3 முறை இருந்துள்ள ஓம் பிர்லா, கோடா மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக, சிவசேனை உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகள் ஓம் பிர்லாவின் பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுதவிர காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்ததால், அவர் போட்டியின்றி ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................