This Article is From May 27, 2019

முஸ்லீம் இளைஞரை தாக்கியது கண்டிக்கத்தக்கது - கவுதம் காம்பீர்

சனிக்கிழமை இரவு 25 வயது முஸ்லீம் இளைஞர் ஒருவர் இரவு தொழுகையை முடித்து விட்டு வரும் வழியில் தாக்கப்பட்டு “ஜெய் ஶ்ரீராம்” சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

முஸ்லீம் இளைஞரை தாக்கியது கண்டிக்கத்தக்கது - கவுதம் காம்பீர்

Gautam Gambhir, a former cricketer won the national election from East Delhi. (File)

New Delhi:

முஸ்லீம் இளைஞர் ஒருவரை ‘ஜெய் ஶ்ரீராம்' சொல்லச் சொல்லி அடித்த நிகழ்வுக்கு பாஜக கட்சியை சேர்ந்த கவுதம் காம்பீர் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லியில் பாஜக சார்பாக நின்று வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை இது குறித்து ட்விட் செய்த கவுதம் காம்பீர் “நாம் மதச்சார்பற்ற நாட்டில் இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

குருகிராமில் முஸ்லிம் இளைஞரை தலையில் வைத்திருந்த தொப்பியை நீக்கி ‘ஜெய் ஶ்ரீராம்' என்று கோஷமிட சொல்லி அடித்து மிரட்டியுள்ளனர். இது வருந்தத்தக்க ஒன்று. குருகிராம் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் வாழ்வது மதச்சார்பற்ற நாட்டில் என்று கவுதம் காம்பீர் ட்விட்டில் தெரிவித்திருந்தார்.

"In Gurugram Muslim man told to remove skullcap,chant Jai Shri Ram".
It is deplorable. Exemplary action needed by Gurugram authorities. We are a secular nation where @Javedakhtarjadu writes "ओ पालन हारे, निर्गुण और न्यारे" & @RakeyshOmMehra gave us d song "अर्ज़ियाँ" in Delhi 6.

மற்றொரு ட்விட்டில் மதச்சார்பின்மை என்பது பிரதமர் மோடியின் மந்திரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு 25 வயது முஸ்லீம் இளைஞர் ஒருவர் இரவு தொழுகையை முடித்து விட்டு வரும் வழியில் தாக்கப்பட்டு  “ஜெய் ஶ்ரீராம்” சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். 

முகம்மது பரக்கத் ஆலம் கூறியதாவது, 5 பேர் கொண்ட கும்பல் என் தலையில் உள்ள தொப்பியை நீக்கி ஜெய் ஶ்ரீராம் சொல்ல கட்டளையிட்டனர்.ஆனால், தான் தொப்பியை நீக்க மறுத்து விட்டேன். அந்தக் கும்பல் பின் தலையில் அடித்து தொப்பியை நீக்கி என்ன மிரட்டினார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து என்னை ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொன்னார்கள். நான் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு என்னை அடித்து என் உடையை கிழித்தனர் என்று தெரிவித்தார்.

குற்றவாளிகள் பைக்கில் தப்பிச் சென்றனர். காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

.