அரசு அதிகாரிகளை பேட்டால் தாக்கிய எம்.எல்.ஏ - சிறையிலிருந்து விடுதலை

.சிறையிலிருந்து வெளியே வந்த ஆகாஷ் விஜய் வர்க்கியா “சிறையில் நன்றாக நேரத்தை செலவிட்டேன். இனி மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

ஜாமீனில் வெளி வந்ததைக் கொண்டாடும் பொருட்டு ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


Indore: 

ஹைலைட்ஸ்

  1. அரசு அதிகாரிகளை பேட்டினால் தாக்கினார் ஆகாஷ் விஜய்வர்க்கியா
  2. ஆகாஷ் இந்தூர் -3 தொகுதியின் எம்.எல்.ஏ ஆவார்
  3. போபால் சிறப்பு நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் அளித்துள்ளது

அரசு அதிகாரிகளை பேட்டால் தாக்கிய மத்திய பிரதேச எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்க்கியா சிறையிலிருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மத்திய பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியாவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆகாஷ் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

ifvgei1g

அதன் பின் அதிகாரிகள் கொடுத்த புகாரில் ஆகாஷ் விஜய்வர்க்கியா கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப் நீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில் இன்று ஆகாஷ் விஜய்வர்க்கியா சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த ஆகாஷ் விஜய் வர்க்கியா “சிறையில் நன்றாக நேரத்தை செலவிட்டேன். இனி மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று கூறினார். இவரது ஜாமீனில் வெளி வந்ததைக் கொண்டாடும் பொருட்டு ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


 

0rhqg43s

நடந்தது என்ன?


மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் -3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு பிரச்னை எழுந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக உள்ளாட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய் வர்கியாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

''அப்போது 5 நிமிடத்தில் அதிகாரிகள் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு'' என்று எச்சரித்தார். அடுத்த சில நிமிடங்களில் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, ஆகாஷ் கிரிக்கெட் பேட்டால் அதிகாரிகளை அடித்து விரட்ட ஆரம்பித்தார். 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................