குஜராத்தின் 4 சட்டசபை இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி!!

4 தொகுதி இடைத்தேர்தல் வெற்றியில் மூலம் குஜராத் சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
குஜராத்தின் 4 சட்டசபை இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி!!

மக்களவை தேர்தலில் குஜராத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.


Ahmedabad: 

குஜராத் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த 4 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வந்தாலும் இன்றுதான் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தரங்கத்ரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சபரியா காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் படேலை 34,280 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 

மனவதார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்த் லடானியை 9,759 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஜவகர் சாதா வெற்றி பெற்றார். உஞ்சா சட்டமன்ற தொகுதியில் 23,072 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் காந்திபாய் படேலை பாஜக வேட்பாளர் ஆஷாபெண் படேல் வீழ்த்தினார். 

ஜாம் நகர் ரூரல் தொகுதியில் பாஜகவின் ராகவ்ஜி படேல் 33,022 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் ஜெயந்திபாய் சபயாவை வென்றார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................