அரசியல் தீண்டாமை, வன்முறைக்கு பாஜக ஆளானது: மோடி பேச்சு

பாஜக எப்போதும், 2 சவால்களை எதிர்கொள்ளும், ஒன்று அரசியல் தீண்டாமை, மற்றொன்று அரசியல் வன்முறை. ஆனால் இன்று, ஒரு கட்சி உண்மையிலேயே ஜனநாயக ரீதியாக இருக்கிறது என்றால், அது பாஜக தான். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதும் ஜனநாயகம் பற்றி கவலைப்படுகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.


Varanasi: 

2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வரலாறு காணாத வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, சில மாநிலங்களில் தங்களது அரசியல் காரணங்களுக்காக நூற்றுக்கணக்காண பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படி பாஜகவினர் மீதான அரசியல் தீண்டாமை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு சில இடங்களில் பாஜக என்ற பெயரே தீண்டாமை சூழலை உருவாக்கும் வகையில் இருந்தது.

மேற்குவங்கம், கேரளா மற்றும் காஷ்மீரில் எதற்காக பாஜக பிரமுகர்கள் கொல்லப்படுகின்றனர்? இது ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் வெட்கக்கேடானது. ஆனால் இன்று, ஒரு கட்சி நிம்மதியாக, ஜனநாயக முறையில் மூச்சு விடுகிறது என்றால் அது பாஜக தான் என்று அவர் கூறினார்.

மேற்குவங்கத்தில் 2012ல் இரண்டு தொகுதிகளில் மற்றும் வெற்றி பெற்ற பாஜக, தற்போது 16 தொகுதிகளில் வென்றுள்ளது. அந்த மாநிலத்தில் நடந்த ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது.

வாரணாசி தொகுதியில் மாபெரும் வாக்குகள் பெற்று 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2014 தேர்தலை காட்டிலும் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், 282 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................