“தமிழ்நாட்டில் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளோம்” – சொல்கிறார் பாஜக தமிழக தலைவர்

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என தமிழிசை கருத்து

 Share
EMAIL
PRINT
COMMENTS
“தமிழ்நாட்டில் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளோம்” – சொல்கிறார் பாஜக தமிழக தலைவர்

சென்னை: தமிழ்நாட்டில் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்திருப்பதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-

“அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து செயல்பட்டு வருவதாக திமுக கூறி வருகிறது. இது உண்மை அல்ல. தமிழக மக்களுடன் மட்டும்தான் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம்.

மக்கள் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் தமிழக பாஜக விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பாக பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை (அதிமுக) தமிழ்நாட்டில் பாஜகவும், திமுகவும் கூட்டணி அமைக்கும். இந்த இரு கட்சியும் ஏற்கனவே கூட்டணி அமைத்து கடந்த 1999 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்தன என்று கூறியிருந்தார். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................