மத்திய பிரதேச பத்திரிகையாளர்கள் நேர்மையற்றவர்கள் - தாக்கும் பிரக்யா சிங்

காணொளி ஒன்றில், பத்திரிகையாளர்களிடம் சிரித்தபடி “உங்களை புகழ்ந்து சொல்வதென்றால் செஹோரின் முழு ஊடகங்களும் நேர்மையற்றவை” என்று கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மத்திய பிரதேச பத்திரிகையாளர்கள் நேர்மையற்றவர்கள் - தாக்கும் பிரக்யா சிங்

கடந்த மாதம் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கெட்ட சக்திகளை ஏவி விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்

Bhopal: 

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் பாஜக எம்.பி பிரக்யா சிங் தக்கூர் மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்ட ஊடகவியலாளர்களை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டார். 

காணொளி ஒன்றில், பத்திரிகையாளர்களிடம் சிரித்தபடி “உங்களை புகழ்ந்து சொல்வதென்றால் செஹோரின் முழு ஊடகங்களும் நேர்மையற்றவை” என்று கூறியுள்ளார். 

2008 மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா தக்கூரின் மற்றொரு காணொளியில் ரூ. 500 நோட்டு மக்களுக்காக புழக்கத்தில் விடப்படுகின்றன என்று கூறியிருந்தார்.

பிரக்யா தக்கூரின் கருத்துகளுக்கு பதிலளித்த மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி “அவரது தொடர்ச்சியான கருத்துக்கள் அவருக்கு மன சமநிலையை இழந்து விட்டதை தெரிவிக்கிறது” என்று கூறினார். 

பாஜகவும் பிரக்யாவின் கருத்துகளிலிருந்து விலகிவிட்டது. “அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், பத்திரிகையாளர்களின் பொறுப்பை மதிக்கிறோம். போபாலிலோ அல்லது வேறு இடத்திலோ ஊடகங்களின் உறுதிபாட்டை கட்சி மதிக்கிறது” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் அகர்வால் கூறினார். 

கடந்த மாதம் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கெட்ட சக்திகளை ஏவி விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.பாஜக உயர்மட்ட தலைவர்கள் இறந்து போவதற்கு அதுவே காரணம் என்று கூறியிருந்தார். மறைந்த பாஜக தலைவர்கள் அனைவரும் உடல் நலக்குறைவினால் இறந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................