சாலையோரம் படுத்திருந்த தொழிலாளிகள் மீது, குடித்துவிட்டு காரை ஏற்றிய பா.ஜ.க தலைவரின் மகன்

ஜெய்பூரில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று சலையோரம் உறங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது ஏறியது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Jaipur: 

ஜெய்பூரில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று சலையோரம் உறங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது ஏறியது. இதில் 2 பேர் பலியாகினர். காரை இயக்கியது உள்ளூர் பா.ஜ.க தலைவரின் மகன் என்ற தெரிய வந்துள்ளது. அவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

“ பிளாட்பார்மில் படுத்திருந்த 4 பேர் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று ஏறியது. 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.” என காவல் துறை தெரிவித்துள்ளது.

காரை ஓட்டிய பரத் பூஷன் மீனா (35), மிக அதிக அளவு குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவை விட 9 மடங்கு அதிகமாக அவர் குடித்திருந்திருக்கிறார்.

பரத்துடன் காரில் பயணித்த நண்பர்களும் குடி போதையில் இருந்துள்ளனர். முதலில் பிளாட்ஃபார்மில் மோதிய பரத், அங்கிருந்து தப்பிக்கு ஆக்சலரேட்டரை முழு வேகத்தில் அழுத்தியதில், கார் அங்கு படுத்திருந்த தொழிலாளிகள் மீது ஏறியுள்ளது, தெரியவந்துள்ளது.

பரத் மீது கொலை முயற்சி மற்றும் குடி போதையில் கார் ஓட்டிய குற்றங்களுக்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் ஓட்டிய அந்த கார் பா.ஜ.கவின் கிசான் மோர்ச்சா தலைவர் பத்ரி நாரயண மீனாவின் பேரில் பதிவாகியுள்ளது.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................