This Article is From Jan 31, 2019

காந்தியின் உருவ பொம்மையை சுட்ட வலதுசாரிகள்; நெருக்கம் காட்டிய பாஜக தலைவர்கள்..!

தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் காந்தியின் நினைவு நாளை அனுசரித்து வந்தபோது, உத்தர பிரதேசத்தில் இந்து மகா சபாவினர், காந்தியின் உருவ பொம்மை சுட்டு அதைக் கொண்டாடினர்.

ஹைலைட்ஸ்

  • பூஜா ஷகுனே, படங்களை தமது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
  • பூஜா, அந்தப் படங்களை தற்போது நீக்கியுள்ளார்
  • நேற்று இந்து மகா சபாவினர், காந்தியின் உருவ பொம்மையை சுட்டு கொண்டாடினர்
New Delhi:

தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகள் காந்தியின் நினைவு நாளை அனுசரித்து வந்தபோது, உத்தர பிரதேசத்தில் இந்து மகா சபாவினர், காந்தியின் உருவ பொம்மை சுட்டு அதைக் கொண்டாடினர். தேசத் தந்தையின் நினைவு நாளை, ‘சுட்டு' கொண்டாடிய இந்து மகா சபாவின் தலைவர் பூஜா ஷகுன் பாண்டேவின் செயல் மிகவும் கண்டனத்துக்கு உள்ளானது. 

இந்நிலையில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், இன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் பூஜா ஷகுனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன. இந்தப் படங்களை பூஜா ஷகுன், தனது முகநூலிலே பகிர்ந்திருந்தார். மார்ச் 19, 2017 ஆம் நாள் அன்று பாஜக தலைவர்களுடன் அவர் இருக்கும் படங்களை பூஜா முகநூலில் பகிர்ந்துள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. 

நேற்று காந்தியின் உருவ பொம்மையை சுட்டு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பூஜா, ‘இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்த உள்ளோம். தசரா பண்டிகையின் போது ராவணனின் உருவ பொம்மையை எரிப்பது போன்றது இந்த நிகழ்வு' என்று அவர் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் கருத்து கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக, உத்தர பிரதேச காவல் துறை, இந்து மகா சபா நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக இதுவரை, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே இந்து மகா சபாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

.